Posts

Showing posts from October, 2013

எனக்கு பிடித்த சில பாடல்களும் அதன் விளக்கமும்

சில பாடல்களும் அதன் விளக்கமும் நன்றி: ஆதித்ய இளம்பிறையன் தலை வணங்கா தமிழன் பிளாக்!! பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் புன்னகையோ மௌவல் மௌவல் .. ( படம் : சிவாஜி ) ஆம்பல் -> இரவிலே பூத்து பகலிலே குவியும் ஒரு வகை அல்லி பூ.   மௌவல் -> ஒரு வகை காட்டு மல்லி. செந்நிறமாக இருக்கும். விளக்கம்   பூ போன்ற பெண்ணே !! நீ இரவிலே பூத்து பகலிலே குவியும் அல்லிகொடி !! உன் புன்னகையோ காட்டு மல்லி !! ( கட்டு மல்லி மலர்ந்து காடு முழுவதும் வாசனை பரப்புவது போல உன் புன்னகை அனைவரையும் புன்னகை கொள்ள செய்கும் ) ஆம்பல் - அல்லிக்கொடி ( ஓர் இசைக்குழல் என்றும் கொள்ளலாம் )   இருவகை ஆம்பல் உண்டு!   அரக்காம்பல்------செவ்வல்லி   வெள்ளாம்பல்----வெள்ளல்லி!   மலர்களை ஏன் பெண்கள் சூடுகிறார்கள் ?   மலருக்கு இயற்கையான ஒரு தன்மையுண்டு. பஞ்சினைப் போல் ஈரத்தை உறிஞ்சும் தன்மையுண்டு. கூந்தலில் நிறைய மலர்களை சூடும்போது, கூந்தலிளுள்ள ஈரத்தினை ஈர்த்துவிடுகிறது. அதோடு கூந்தலுக்கு அழகையும் தருகிறது. என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம் ( படம் : வேட்டையாடு விளையாடு ) ...