Posts

Showing posts from 2015

பெண்ணியமாம் வெங்காயம் - 2

Image
”சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை” அவன் ஆம்பளடி யார் கூட வேணாலும் போவான். எத்தன பொண்ணுங்க கூட வேணாலும் பழகுவான்.” போன்ற வாசகங்களை அடிக்கடி கேட்டிருப்பீர்கள். ஏன் பெண்ணுக்கு தொடர்ந்து அனைத்து உரிமைகளும் மறுக்கப்படுகிறது..? யார் இதை வகுத்தது…?? யார் இதை கடைபிடிக்கிறார்கள்..??? ஒட்டு மொத்த சமூகமும் தான். ஆம் ஆணும் பெண்ணும் அங்கம் வகிக்கும் இந்த சமூகம் தான். ”ஒருவனுக்கு ஒருத்தி” எனும் அடிப்படை கோட்பாடு கொண்ட இந்த சமூகம் [அதாவது ஆண்களும் பெண்களும் உள்ளடங்கிய சமூகம்] ஒரு பெண் வேற்று ஆணுடன் உடல் ரீதியாக பழகுவதை ஏற்றுக்கொள்வதில்லை. இது ஒரு நல்ல நெறியே. அதே போல் ஒரு ஆண் வேற்று பெண்ணிடம் உறவு வைத்துக்கொள்ளும்போதும் ஏற்றுக்கொள்ள கூடாது அல்லவா… அது தானே நியாயம். ஆனால் அப்போது மட்டும் இந்த சமூகம் “அவன் ஆம்பள எத்தன பேர வேணாலும் வைச்சிப்பான்” என ஏற்றுக்கொள்கிறது. அதாவது ஆணும் பெண்ணும் உள்ளடங்கிய இந்த சமூகம் ஏற்றுக்கொள்கிறது. ஆண் இதை ஆமோதிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால் அவனுக்கு அதுதான் வேண்டும். அப்போதுதான் அவன் சுதந்திரமாக தவறு செய்ய முடியும். ஆனால் பெண் ஏன் இதை ஏற்றுக்கொள்கிறாள்..? ...

பெண்ணியமாம் வெங்காயம் - 1

Image
சிலபேர் செல்போன எடுத்து காதுல வைச்சா சாப்பாடு தூக்கம் எல்லாம் மறந்து போய்ட்றாங்க. ஏன் இப்படி பேசறாங்க…?? பெரும்பாலும் ஆண் அதிக உணர்வுகள் கொண்டவனாகவும் பெண் அதிக உணர்ச்சிகள் கொண்டவளாகவும் உள்ளனர். சிரிப்பு, அழுகை, கண்ணீர், கோபம், காமம், இன்பம் துன்பம், வன்மம் என எல்லாமே ஆணைவிட பெண்ணுக்கு ஒரு படி அதிகம் தான். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது சுத்த பொய், மாறாக ஓர் அன்பு உள்ளது என்பதே உண்மை. அது தந்தையாகவோ, தாயாகவோ, காதலியாகவோ, மனைவியாகவோ, நண்பனாகவோ இன்னும் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அன்பை வெளிக்காட்டுவதில் ஆண் பெண்ணிடம் ஒவ்வொரு முறையும் தோற்றுவிடுகிறான். அதனால் அதிக அன்புடைய பெண்களே அந்த இடத்தை 90% பிடிக்கின்றனர். இந்த அளவு உணர்ச்சிகளை பகிர்ந்துகொள்ளும் தன்மையுள்ள பெண்களுக்கு தோல் சாய்ந்து அழவும் மகிழ்ந்து பேசவும் வீட்டில் துணை இல்லாத போது வேறு வழியின்றி வெளியில் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனால் ஆண்களுக்கு அந்த கதையெல்லாம் இல்லை அவனுக்கு பெரும்பாலும் பெண் பேசினாலே போதை தான். இதற்க்காகவே டைம் டேபில் போட்டு வரிசையாக எல்லோரிடமும் பேசுபவர்கள்...