பெண்ணியமாம் வெங்காயம் - 2


”சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை”

அவன் ஆம்பளடி யார் கூட வேணாலும் போவான். எத்தன பொண்ணுங்க கூட வேணாலும் பழகுவான்.”

போன்ற வாசகங்களை அடிக்கடி கேட்டிருப்பீர்கள். ஏன் பெண்ணுக்கு தொடர்ந்து அனைத்து உரிமைகளும் மறுக்கப்படுகிறது..? யார் இதை வகுத்தது…?? யார் இதை கடைபிடிக்கிறார்கள்..???

ஒட்டு மொத்த சமூகமும் தான். ஆம் ஆணும் பெண்ணும் அங்கம் வகிக்கும் இந்த சமூகம் தான். ”ஒருவனுக்கு ஒருத்தி” எனும் அடிப்படை கோட்பாடு கொண்ட இந்த சமூகம் [அதாவது ஆண்களும் பெண்களும் உள்ளடங்கிய சமூகம்] ஒரு பெண் வேற்று ஆணுடன் உடல் ரீதியாக பழகுவதை ஏற்றுக்கொள்வதில்லை. இது ஒரு நல்ல நெறியே. அதே போல் ஒரு ஆண் வேற்று பெண்ணிடம் உறவு வைத்துக்கொள்ளும்போதும் ஏற்றுக்கொள்ள கூடாது அல்லவா… அது தானே நியாயம். ஆனால் அப்போது மட்டும் இந்த சமூகம் “அவன் ஆம்பள எத்தன பேர வேணாலும் வைச்சிப்பான்” என ஏற்றுக்கொள்கிறது. அதாவது ஆணும் பெண்ணும் உள்ளடங்கிய இந்த சமூகம் ஏற்றுக்கொள்கிறது. ஆண் இதை ஆமோதிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால் அவனுக்கு அதுதான் வேண்டும். அப்போதுதான் அவன் சுதந்திரமாக தவறு செய்ய முடியும். ஆனால் பெண் ஏன் இதை ஏற்றுக்கொள்கிறாள்..? ஏன் இதை கேவலமாக நினைப்பதில்லை…?? ஏன் அறுபது தாண்டிய பாட்டிக்கள் “அவன் ஆம்பள சிங்கம்டி” னு கொம்பு சீவி விட்டுக்கொண்டே இருக்கிறார்கள்….???

ஆக இங்கு பெண் என்பவள் உடல் என்றும் ஆண் முரடன் என்றும் பார்க்கபடுகிறார்கள். இருவரும் அறிவு என்று பார்க்கபடுவதே இல்லை.

பெண்ணியத்தை ஆதரிக்கும் நீங்கள் அறிவு படைத்தவர்களாக இருந்தால், அறிவு பூர்வமான கோட்பாடு கொண்டவர்களாக இருந்தால் ஆண் செய்யும் இந்த இழிவு செயலை கேவலமாக பார்த்திருக்க வேண்டும். பாரதி சென்னது போல “ஒரு ஊரில் ஒரு பெண் கற்பிழந்தாள் என்றாள் ஒரு ஆணும் கற்பிழந்தான் என்றுதானே அர்த்தம்” என குரலை உயர்த்தி இருக்க வேண்டும். மாறாக எல்லாவற்றிலும் சரியாக உள்ள உத்தம ஆணை கேவலமாகவும் ப்ளேபாய்[Playboy]-களை ஹீரோ[Hero]-வாகவும் பார்க்கிறார்கள் இன்றைய பெண்கள்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்த முரன்பட்ட மனநிலை இருக்கும் வரை பெண்கள் ஆணுக்கு கீழே தான் இருப்பார்கள். சமநிலை ஆகவே முடியாது, சாத்தியமற்றது. ஏனென்றால் நான் வெறும் உடல்தான் என பெண் ஏற்றுக்கொண்டு இருக்கிறாள். ஆனால் ஆண் ஒருவன் தொட்ட பெண்ணை கேவலமாக நினைக்கிறான், ஏற்றுக்கொள்வதே இல்லை. {பரிதாபத்தில் ஏற்றுக்கொள்ளும் சில பகுத்தறிவாளர்கள் உண்டு}.

இங்கு பெண்ணுக்கு ஆண் எதிரி என நீண்டகாலமாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் பெரும்பலான நேர்ங்களில் பெண்ணுக்கு பெண்ணே எதிரியாக இருக்கிறாள்.

உங்கள் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துகணிப்பின்படி 60%க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுக்கு பல பெண்களுடன் உடலுறவு கொண்டு அனுபவம் உள்ள ஆண் கணவனாக வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் 99% பேர் திருமணத்திற்க்கு முன் உறவு வைத்திருந்த்து திருமணத்திற்க்கு பின் தெரியவந்தால் பரவாயில்லை ஏற்றுக்கொள்கிறோம் என்கிறார்கள்.

காணொலியை பாருங்கள்..



இவங்களே ஒத்துப்பாங்களாம் அப்புறம் இவங்களே எதிர்ப்பாங்களாம்   பெண்ணியமாம் வெங்காயம்

- வள்ளல்ராஜ்

Comments

Popular posts from this blog

Theemithi Thiruvizha

எனக்கு பிடித்த சில பாடல்களும் அதன் விளக்கமும்

பெண்ணியமாம் வெங்காயம் - 1