தேர்தல் ஆனையத்தின் அவலம் [ வெட்க்ககேடு ]

இன்று [13-4-2011] நடந்த தேர்லுக்கு ஓட்டு போடுவதற்க்காக நான் சென்றிருந்தேன்.
எனக்கு எந்த கட்சிக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லாததால் தேர்தல் அதிகாரியிடம் சென்று 49-0 முறைப் படி எனக்கு ஓட்டு போட விருப்பம் இல்லை என தெரிவித்தேன்.
அதற்கு தேர்தல் அதிகாரி ” 49-0 ….!!! அப்படி என்றால் என்ன? ” என கேட்டார்.
நான் 49-0 என்பது ஒரு விதி என்று சொல்லி அதன் விளக்கத்தையும் சொன்னேன்.
அப்படியா…!!! என்று கேட்ட அவர் பிறகு தேர்தல் குறிப்பேட்டு புத்தகத்தை எடுத்து புரட்டி பார்த்தார். இதில் மிக பெரிய நகைசுவை என்னவென்றால் குறிப்பேட்டு புத்தகம் ஆங்கிலத்தில் உள்ளது ஆனால் இவருக்கோ சரியாக ஆங்கிலம் படிக்க தெரியவில்லை. அவர் சரியாக 35 நிமிடம் தேடி பார்த்தார். அவன் பின்னர் அவர் புரட்டிக் கொண்டிருந்த புத்தகத்தில் 49-0 விதிமுறை வரும்போது நானே சுட்டி காட்டினேன்.
அதன் பிறகும் என்ன செய்வதென்று தெரியாத தேர்தல் அதிகாரியிடம் ஒரு வெள்ளை காகிதத்தில் ” எனக்கு எந்த கட்சிக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை ” என எழுதி கையொப்பமிட்டு கொடுத்துவிட்டு. வாக்காளர் பதிவேட்டில் குறிக்க சொன்னேன்.
மேலும் எனக்கு வாக்களிக்க விருப்பமில்லை என்ற செய்தியை அருகில் உள்ள அதிகாரிடம் அவர் சொன்னபோது அனைவருக்கும் கேட்கும் படி மிகுந்த சத்ததுடன் சொன்னார். ( இதை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்பது விதிமுறை ) இதனால் பல கட்சியினரின் மனதிலும் நான் எதிரியாக தோன்ற கூடும்.
எல்லாம் முடிந்த பிறகு எனக்கு கையில் மை வைக்கவில்லை.
தேர்தல் விதிமுறைகளே தெரியாதவர்களை தேர்தல் அதிகாரியாக நியமிக்கும் அளவிற்கு மானக்கேடான நிலை இங்கு மட்டுமே இருக்கிறது. தேர்தல் ஆனையத்தின் மீது எனக்கு ஒரு நல்ல எண்ணம் இருந்தது. ஆனால் இது போன்று வெட்க்ககேடான நிலையை பார்த்த போது அந்த எண்ணம் தலைகீழாக மாறியுள்ளது.
சம்பவம் நடந்த இடம்: அரசினர் மேல் நிலை பள்ளி ( பிரிவு எண் 93 )
திருமுல்லைவாசல்
சீர்காழி தொகுதி
நாகப்பட்டினம் மாவட்டம்.

Comments

Popular posts from this blog

Theemithi Thiruvizha

எனக்கு பிடித்த சில பாடல்களும் அதன் விளக்கமும்

பெண்ணியமாம் வெங்காயம் - 1